Latestஉலகம்

காட்டுத் தீ: இந்தோனேசியாவில் 32 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஜகார்த்தா, அக்டோபர் 22 – இந்தோனேசியாவில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீ விபத்துகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 32 நிறுவனங்கள் மீது அந்நாட்டு வனத்துறை அமைச்சு நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 18,000 ஹெக்டேர் நிலம் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறு நிறுவனங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையில் சட்ட மீறல்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராஜா ஜூலி அந்தோனி (Raja Juli Antoni) தெரிவித்துள்ளார்.

மேலும், காட்டுத் தீ தொடர்பாக 120 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவை குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!