அமெரிக்காவின் உத்தா மாநிலத்தில் கலினா எனும் பூனை ஒன்று கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து அதனை பல இடங்களில் தேடிய அதன் உரிமையாளர்களான கேரி மற்றும் மேட் இறுதியாக வேறு வழியின்றி போஸ்டர்கள் ஒட்டி பூனை காணவில்லை என அறிவித்திருந்தனர்.
அப்படியிருந்தும் ஒரு வாரமாகியும் பூனைப் பற்றிய வராதநிலையில், திடிரென ஏப்ரல் 17ஆம் திகதி உத்தாவிலிருந்து சுமார் 1000 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கலிபோர்னியா மாநிலத்தில் பூனை கலினா பத்திரமாக இருப்பதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.
இது எப்படி சாத்தியம் என ஆரய்ந்தபோதுதான் பூனை காணாமல் போனதன் மர்மம் அவிழ்க்கப்பட்டது.
பூனையின் உரிமையாளர்கள் அமேசனில் வாங்கிய பொருளை திரும்பக் கொடுக்க வைத்திருந்த பெட்டியில் பூனை கலினா ஒளிந்துக் கொண்ட நிலையில், அதனை சரியாக சரிபார்க்காமல் அப்படியா அனுப்பி வைத்துள்ளனர் அவர்கள்.
அப்பூனையை அமேசன் ஊழியர் ஒருவர் கன்டெடுத்து, அதனை பராமரித்து வந்துள்ளார். தகவல் கிடைத்த மறூநாளே விமானத்தில் கலிபோர்னியாவுக்கு பறந்த கேரி மற்றும் மேட்டுடன் இணைந்தது செல்லப் பூனை கலினா.