Latestஉலகம்

காணாமல்போன MH370 விமானம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் என புதிய அறிகுறி- பிரிட்ஷ் ஆய்வாளர் தகவல்

லண்டன், ஜூன் 19 – 10 ஆண்டுகளுக்கு முன் இந்திய பெருங்கடல் பகுதியில் காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ்ஸின் MH 370 விமானம் மேற்கு ஆஸ்திரேலியா கடலில் இருக்கக்கூடிய புதிய அறிகுறியை பிரிட்டிஷ் ஆய்வாளர் கண்டறிந்துள்ளதாக டெலிகிரெப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. நீருக்கடியில் மைக்ரோஃபோனில் இருந்து ஒரு சமிக்ஞையின் கண்டுபிடிப்பு எம் ,எச் 370 விமானத்தை கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கையை புதுப்பித்துள்ளது. இது விமானத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றைத் தீர்ப்பதாக இருக்கக்கூடும் என கூறப்படுகிது. கார்டிஃப் (Cardiff ) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விமான விபத்துகளால் உருவாக்கப்பட்ட நீருக்கடியில் ஒலி சமிக்ஞைகளை ஆராய்ந்ததில் இருந்து அறிகுறி கிடைத்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் Cape Leeuwin வின் கடலுக்டியில் உள்ள Hidrfon எனப்படும் நீரடி நிலையத்தின் ஒன்றில இந்த அறிகுறி தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியன்று 239 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு பயணச் சேவையில் ஈடுபட்டிந்த MH 370 விமானம் எண்ணெய் முடிந்ததால் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. 119,140 சதுர கிலோமீட்டர் பகுதிக்கும் கூடுதலாக அந்த விமானத்தை தேடும் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் கரையில் ஒதுங்கிய உடைந்த 18 பாகங்கள் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டது. கடலுக்கு அடியிலுள்ள ஒலிக்குறிகை செயல்முறையில் ஆறு வினாடியில் அந்த விமானம் இருந்த ஆகக்கடைசி இடத்திற்கான அறிகுறியை காட்டுவதாக கூறப்படுகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!