
தெலுக் இந்தான், ஜூலை 30 -இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது காதலரின் தாயாரை கொலை செய்ததாக வேலையில்லாத பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் நைடத்துல் அதிரா ஷமான் ( Naidatul Athirah Azman ) முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக 37 வயது பெண் தலையசைத்தார்.
கொலை குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
ஜூலை 15ஆம்தேதி தெலுக் இந்தான் தாமான் இண்டா ஜெயா,ஜாலான்
தெராத்தையிலுள்ள வீட்டில் உள்ள ஒரு அறையில் 66 வயதுடைய மாதுவை கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
கொலையுண்ட மாதுவின் சவப் பரிசோதனை அறிக்கைக்காக செம்டம்பர் 11ஆம் தேதி இந்த குற்றச்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.