
சிரம்பான், ஏப்-7-20 வயதான இளைஞன் ஒருவன் தனது காதலியின் மகளை கற்பழித்ததாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Datin Surita Budin முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டான் .
சமையல்காரராக வேலை செய்துவரும் ஆடவன் நீதிபதி முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
பிப்ரவரி 26 ஆம் தேதிக்கும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குமிடையே காலை 8 மணி முதல் 10 மணிக்குள், ரெம்பாவ், Taman Dato Undang Haji Mohammad Sharif என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் 16 வயது சிறுமியை அவ்வாடவர் கற்பழித்ததாக தண்டனைச் சட்டத்தின் 376 (1) பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டான்.
அந்த நபருக்கு 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு கட்டொழுங்கு நெறி மற்றும் தண்டனை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜூன் 15 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.



