Latestஉலகம்

காதல் மோசடி; சீன நாட்டு காதலனை நம்பி மோசம் போன மூவார் பெண் வர்த்தகர்; 385,00 ரிங்கிட் மாயம்

மூவார், ஜூலை, 27 – ஜோகூர் மூவாரைச் சேர்ந்த பெண் வர்த்தகர் வெளிநாட்டு ஆடவரின் காதல் வலையில் சிக்கி 385,000 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.

50 வயது அம்மாதுவுக்கு, இணையம் வாயிலாக சீனாவைச் சேர்ந்த ஆடவருடன் அறிமுகமேற்பட்டு, அது பின்னர் காதலாக மாறியுள்ளது.

கணிணிப் பொறியாளர் எனக் கூறிக் கொண்ட அவ்வாடவர், 50% இலாபம் பார்க்கலாம் எனச் சொல்லி முதலீட்டுத் திட்டமொன்றை அம்மாதுவிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘காதல் மயக்கத்தில்’ இருந்ததால் முன்பின் யோசிக்காத அம்மாது, ஒரு நிறுவனத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டிருந்த 2 வங்கிக் கணக்குகளுக்கு ஜூன் 27 – ஜூலை 10 இடைப்பட்ட காலத்தில் 12 தடவையாக பண்ணத்தை மாற்றியுள்ளார்.

முதலீடு செய்ததில் 600,000 ரிங்கிட் இலாபம் கிடைத்திருப்பதாக கணிணி காட்டியதால் மகிழ்ந்துப் போனவருக்கு, அப்பணத்தை எடுக்க முயன்ற போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.

மேலும் 100,000 ரிங்கிட்டைப் போட்டால் தான் அந்த இலாபத் தொகைக் கிடைக்குமென சீன நாட்டு காதலன் கூறியிருக்கிறார்.

அதற்கு மறுத்த அம்மாது பின்னர் பல தடவை முயன்றும் அவ்வாடவரைத் தொடர்புக் கொள்ளமுடியவில்லையென போலீஸ் புகாரில் கூறினார்.

அச்சம்பவத்தை விசாரித்து வருவதாகக் கோறிய மூவார் போலீஸ், Love Scam குறித்து கவனமாக இருக்கும்படி பொதுமக்களை மீண்டும் நினைவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!