Latestமலேசியா

காதல் மோசடி திட்டத்தில் 12,000 ரிங்கிட்டை ஏமாற்றிய ஆடவன் கைது

புத்ரா ஜெயா, மே 24 – ஒரு ஆடவரை மயக்குவதற்காக ஒரு பெண்ணைப் போல் காதல்வசனம் பேசி 12,000 ரிங்கிட்டை ஏமாற்றிய 27 வயது ஆடவரை போலீசார் கைது செய்தனர். பணத்தை பறிகொடுத்த ஆடவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து புதன்கிழமையன்று அந்த சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக Sepang மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Shan Gopal தெரிவித்தார். Bandar Baru Salak Tinggiயில் வசித்துவரும் பாதிக்கப்பட்ட நபர் Tinder மூலம் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்ததாகவும் தமது சகோதரர் இங்கிலாந்திற்கு செல்லவிருப்பதாகவும் இறப்பதற்கு முன் தமது இருதயத்தை தானமாக வழங்குவதற்காக அவர் செல்வதால் அதற்கு 12,000 ரிங்கிட் கொடுத்து உதவும்படி கோரியதை தொடர்ந்து அவருக்கு பாதிக்கப்பட்டவர் பணத்தை கொடுத்துள்ளார்.

அதன் பின்னர்தான் தமது நண்பர் ஒருவரும் இதே போன்று பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் இந்த சதித்திட்டத்தில் தாமும் ஏமாந்துவிட்டதை உணர்ந்து போலீசில் புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் சைபர் ஜெயாவில் மோசடியில் ஈடுபட்ட அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் கைது செய்தனர். குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் விசாரணைக்கான அந்த சந்தேகப் பேர்வழி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Superintendan Shan Gopal உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!