காப்பார், ஏப்ரல்-29, சிலாங்கூர், காப்பாரில் உள்ள மேரு தொழில்பேட்டையில் சாயம் தயாரிக்கும் 2 தொழிற்சாலைகள் இன்று காலை பெரும் தீயில் அழிந்தன.
காலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்து, 39 பேர் கொண்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
அவர்கள் சென்று சேர்ந்த போது தொழிற்சாலைகளின் பெரும்பகுதி தீயில் சூழ்ந்திருந்தது.
கொளுந்து விட்டு எரியும் தீயை அணைக்க அவர்கள் இன்னமும் போராடி வருகின்றனர்.
அவ்விரு தொழிற்சாலைகளும் தீயில் எரியும் காணொலிகள் வைரலாகி வருகின்றன.
வானில் பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகை கிளம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அருகில் உள்ள விவசாயத் தோட்டத்திற்கும் தீ பரவியிருப்பதைக் காட்டும் காணொலிகளும் அவற்றில் அடங்கும்.
தீக்கான காரணம் குறித்து இதுவரை தகவலேதும் இல்லை.