Latestஉலகம்மலேசியா

ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியிடம் மண்ணைக் கவ்விய மென்சஸ்டர் யுனைட்டெட்; கடுப்பாகி ‘boo’ செய்த இரசிகர்கள்

புக்கிட் ஜாலில், மே-29- இங்லீஷ் பிரிமியர் லீக்கின் ஜாம்பவான் அணியான Manchester United, தனது ஆசிய சுற்றுப்பயண நட்புமுறை ஆட்டத்தில் ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணியிடம் 0-1 என மண்ணைக் கவ்வியது.

புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் 72,550 இரசிகர்கள் முன்னிலையில் Ruben Amorim அணி தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முற்பாதி ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்த நிலையில், பிற்பாதியின் 72-வது நிமிடத்தில் மியன்மாரின் Maung Maung Lwin ஆசியான் ஆல் ஸ்டார்ஸின் வெற்றி கோலை புகுத்தினார்.

கேப்டனாக களமிறங்கிய Harry Maguire, கெசமிரோ, கோல் காவலர் Andre Onana, நட்சத்திர வீரர் Bruno Fernandes, Amad Diallo, Garnacho என பலம் வாய்ந்த விளையாட்டாளர்கள் களமிறக்கப்பட்டும், ஒரு சில தினங்களுக்கு முன்னரே ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்ட ஆசியான் அணியிடம் கோலடிக்க முடியாமல் United திணறியது.

தங்களின் அபிமான அணி கோல் வேட்டை நடத்தும் என்ற எதிர்பார்ப்பில் குவிந்திருந்த இரசிகர்கள் இதனால் ‘கடுப்பாகி’ United வீரர்களை ‘boo’ செய்தனர்.

இதனிடையே வெற்றிப் பெற்ற ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோப்பையை எடுத்து வழங்கினார்.

இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோவும் உடனிருந்தார்.

ஆட்டம் முடிந்த கையோடு யுனைட்டெட் ஹோங் கோங் புறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!