Latestமலேசியா

கார் கவிழ்ந்து கருகி மாண்ட ஆடவர் போதைப் பொருள் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்தவராவார்

மூவார், ஜூலை 5- போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது கார் கவிழ்ந்ததால் கருகி மாண்ட ஆடவர் பழைய குற்றப் பின்னணியை கொண்டிருந்ததோடு அந்த நபர் போதைப் பொருள் குற்றத்திற்காக போலீசாரால் தேடப்பட்டு வந்தவராவார். கடமையின்போது அரசு ஊழியர் ஒருவரை தடுக்க முயன்ற குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் 186 ஆவது விதியின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர் என்று மூவார் மாட்ட போலீஸ் துணை கமிஷனர் ரைய்ஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் ( Raiz Mukliz Azma Aziz ) தெரிவித்தார். இதனிடையே அந்த விபத்தில் சிக்கிய இரண்டு போலீஸ்காரர்கள் தற்போது சீராக இருப்பதோடு அவர்கள் சுயநினைவுக்கு திரும்பிவிட்டனர்.

40 வயதுடைய காப்ரல் கஸ்பி முஹாருடின், Muhd Kasbi Muharuddin மற்றும் 41 வயதுடைய காப்ரல் முகமட் சொபியான் ஹம்சா
( Mohd Sofian Hamzah) ஆகியோர் சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர் . நேற்று விடியற்காலை 4 மணியளவில் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சந்தேகப் பேர்வழி ஓட்டிச் சென்ற Toyota Vios காரை போலீஸ் ரோந்துக் கார் துரத்தியபோது அவ்விரு கார்களும் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. அவற்றில் சந்தேகப் பேர்வழி ஓட்டிச் சென்ற கார் தீப்பிடித்ததால் அதனை ஓட்டிய ஆடவன் கருகி மாண்டான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!