Latestஉலகம்

காற்று கொந்தளிப்பில் சிக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்; காயம் அடைந்த 3 மலேசியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

பேங்காக் , மே 23 – நடுவானில் காற்று கொந்தளிப்பினால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ 321 விமானம் சிக்கி குலுங்கியதில் காயம் அடைந்த மலேசியர்களில் மூவர் பேங்காக்கிலுள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்கை பிரிவில் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென தாய்லாந்திற்கான மலேசியத் தூதர் டத்தோ Jojie Samuel தெரிவித்தார். தலை மற்றும் முதுகில் காயத்திற்கு உள்ளானதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்ட வருகின்றனர். அந்த மூவரும் சுயநினைவோடு இருப்பதோடு பேசுகின்றனர். அவர்களது நிலைமையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

விலா எலும்பு முறிவு, கழுத்து வலி, தலைச்சுற்றல் மற்றும் சிறு காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இதர ஆறு மலேசியர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 31 முதல் 61 வயதுடைய மலேசியர்களில் அறுவர் Samitivej Srinakarin மருத்துவமனையிலும் இதர மூவர் Samitivej Sukhumvit மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாக Jojie Samuel கூறினார். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும் கடப்பாட்டில் தூதரக பணியாளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் SQ 321 விமானம் லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​புறப்பட்ட சுமார் 10 மணி நேரத்திற்குப் பிறகு, 11,277.6 meter உயரத்தில் உள்ள Irrawaddy ஆற்றுப் படுகையில் திடீரென கடும் காற்று கொந்தளிப்பில் சிக்கி குலுங்கியதைத் தொடர்ந்து அந்த விமானம் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் மணி 3.45க்கு அவரசரமாக பேங்காக் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கப்பட்டது. அந்த சம்பவத்தில் 73 வயதுடைய பிரிட்டிஷ் பயணி உயிரிழந்ததோடு பலர் காயம் அடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!