Latestமலேசியா

பள்ளிகளிலும், மருத்துவமனை உட்பட வேலை செய்யும் இடங்களிலும் பகடி வதையை நிறுத்துவீர் – அன்வார் வலியுறத்து

புத்ரா ஜெயா, ஆக 18 – பள்ளிகளிலும் , மருத்துவமனைகள் உட்பட வேலை செய்யும் இடங்களிலும் பகடி வதையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கேட்டுக்கொண்டார்.

உடல் மற்றும் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் விவகாரத்தில் அரசாங்கம் எந்தவொரு சமரசம் அல்லது விட்டுக் கொடுக்கும் போக்கை கொண்டிருக்காது பிரதமர் துறையின் மாதந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.

இந்த கொடுமைப்படுத்தும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தாம் நம்புவதாக அன்வார் கூறினார்.

படிவம் 1 மாணவி Zara Qairina Mahathir மற்றும் tahfiz மாணவர் Wan Ahmad Faris Wan Abdul Rahman ஆகியோர் மரணம் தொடர்பாக அன்வார் கருத்துரைத்தார்.

ஜூலை 16 ஆம் தேதி,சபாவின் பாப்பரில் உள்ள தனது பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் Zara ,மறுநாள் அதிகாலை 4 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட அவர் மறுநாள் Elizabeth அரசியார் மருத்துமனையில் இறந்தார்.

Zaraவின் மரணம் குறித்த விசாரணை இம்மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாத தொடக்கத்தில் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு முன் Wan Faris மரணம் அடைந்தாலும் அவர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டதாக 2016ஆம் ஆண்டு ஜூலை 16ம்தேதி மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tawauவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய ஒருவர் பணியிடத்தில் தொடர்ந்து பகடிவதைக்கு உள்ளானதால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக ஒப்பந்த மருத்துவர்களின் அமைப்பான Hartal கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது.

இதனிடையே சாராவின் மரணத்தில் பகடி வதையை போலீசார் நிராகரிக்கவில்லை என்பதால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அன்வார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!