ஜொகூர் பாரு, மே-8 – தேசியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் Safiq Rahim-மின் கார் கண்ணாடியை உடைத்தவர்களை போலீஸ் தேடுகிறது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக, தென் ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் Assistant Commissioner Raub Selamat கூறினார்.
JDT பயிற்சி மைய வளாகத்தில் தனது Honda City காரின் பின் பக்க கண்ணாடி, மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட புகைப்படத்தை Safiq முன்னதாக சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருந்தார்.
இரவு 10 மணியளவில் JDT பயிற்சி மையத்தில் இருந்து Safiq தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு Pantai Lido-வுக்குப் புறப்பட்ட சமயத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரின் பின்பக்கக் கண்ணாடியை சுத்தியலால் தாக்கியிருக்கின்றனர்.
அதிர்ச்சியில் Safiq காரை நிறுத்தியதும், மர்ம நபர்கள் முன்பக்கமாக வந்து மிரட்டும் தோரணையில் சுத்தியலைத் தூக்கிக் காட்ட, அச்சத்தில் அவர் காரை reverse செய்து அங்கிருந்து கிளம்பினார்.
Harimau Malaya நட்சத்திரம் Faisal Halim கோத்தா டாமான்சாராவில் எரிதிராவக வீச்சுக்கு ஆளான 3 நாட்களுக்குப் பிறகு Safiq Rahim குறி வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு தான் மற்றொரு தேசிய ஆட்டக்காரரான Akhyar Rashid குவாலா திரங்கானுவில் கொள்ளையிடப்பட்டு தாக்கப்பட்டார்.