Latestஇந்தியா

திருப்பதி லட்டுக்கு போலி நெய் விநியோகம்: 96 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நிறுவன உரிமையாளர் கைது

ஹைதராபாத், செப்டம்பர்-20,திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாத தயாரிப்புக்கு சுமார் 96 கோடி ரூபாய் மதிப்பிலான கலப்பட நெய்யை விநியோகித்த புகாரில், நெய் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரை ஹைதராபாத் அமுலாக்கத்துறை அதிரடியாகக் கைதுச் செய்துள்ளது.

​Sukriti Foods நிறுவனத்தின் உரிமையாளரான Kailash Chand Mangla தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

​2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ‘அக்மார்க் சிறப்பு தர பசு நெய்’ என்ற பெயரில் வழங்கப்பட்ட தயாரிப்பில், உண்மையில் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் மற்றும் செயற்கை இரசாயனங்கள் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

​தேவஸ்தானத்திற்கு விநியோகிக்கப்பட்ட சுமார் 230 கோடி ரூபாய் போலி நெய் மோசடியில், Mangla-வின் தொழிற்சாலையில் மட்டும் 96 கோடி ரூபாய் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டு போலி ஆவணங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை தொடர்ந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!