Latestஉலகம்

காஸாவில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை அளிக்க கட்டாருடன் இணைந்து செயல்பட மலேசியா தயார் – பிரதமர் அன்வார்

ரியாத், ஏப் 30 – காஸாவில் காயம் அடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் Qatar மற்றும் மேற்காசியவிலுள்ள இதர நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கு மலேசியா தயாராய் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். உலக பொருளாதார ஆய்வரங்கின்போது Qatar பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான Sheikh Mohammed bin AbdulRahman bin Jassim Al Thani யுடன் பேச்சு நடத்தியபோது அன்வார் இந்த உறுதியை தெரிவித்தார். மலேசியரான Nurul Ain னும் அவரது பாலஸ்தீன கணவர்
Mohamed Am Shaat ட்டும் காஸாவில் நெருக்கடியான இடத்திலிருந்து Rafah எல்லையை கடந்து பாதுகாப்புடன் வெளியேறி 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மலேசியா வந்தடைவதற்கு Qatar ஆற்றிய பங்கிற்காக மலேசியாவின் நன்றியையும் பாராட்டையும் Sheikh Mohammed ட்டிற்கு அன்வார் தெரிவித்துக் கொண்டார்.

பாலஸ்தீன விவகாரத்தில் சமராச ஏற்பாட்டாளராக Qatar ஆற்றிவரும் பங்கு குறித்தும் அன்வார் தமது ஆதரவை தெரிவித்துக் கொண்டார். காஸாவிலுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிக்கான ஆதரவுக்காக இதுவரை விமானத்தின் மூலம் 100 டன் அத்தியாவசியமான பொருட்களையும் மலேசியாவின் அரசு சார்பற்ற இயக்கங்கள் வழங்கிய 1,500 டன் உதவி பொருட்களையும் கடல் மார்க்கம் வழியாக அனுப்பியிருக்கும் தவலையும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!