ஜோகூர் பாரு, மே 16 – உள்துறை வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் ஜோகூர், கிளையைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் மூவார் , Bukit Pasirரில் கிடங்கு ஒன்றில் நடத்திய சோதனையில் 121,518 ரிங்கிட் மதிப்புடைய 56,520 லிட்டர் டீசல் எண்ணெயை பறிமுதல் செய்தனர்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான பெர்மிட் இன்றி அந்த கிடங்கில் டீசல் சேமித்து வைக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து மாலை மணி 4.30 அளவில் பரிசோதனை நடத்தப்பட்டதாக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் ஜோகூர் கிளையின் இயக்குனர் Lilis Saslinda Pornomo தெரிவித்தார்.
டீசல் எண்ணெயை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் 20 டாங்கிகள், டீசல் எண்ணெயை பரிமாற்றக்கூடிய கருவிகள், ஒரு லோரி, ஒரு டிரேலர் ஆகியவவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 375,518 ரிங்கிட்டாகும் என Lilis Saslinda கூறினார்.
அந்த கிடங்கிற்கான லைசென்ஸ் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட டீசலை வைத்திருந்ததற்காக பெர்மிட் போன்ற ஆவணங்களையும் அந்த கிடங்கை சேர்ந்தவர்கள் காட்டத் தவறினர். இந்த சோதனையின்போது லோரி ஓட்டுனர்கள் என நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த இருவர், கிடங்கின் பாதுகாவலர் என நம்பப்படும் வெளிநாட்டு ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டாக அவர் கூறினார். 1961 ஆம் ஆண்டின் கட்டுப்படுத்தப்பட்ட விநியோக சட்டத்தின் 21 ஆவது விதியின் கீழ் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Lilis Saslinda தெரிவித்தார்.