Latestமலேசியா

கின்றாரா தமிழ்ப்பள்ளியைப் பாதுகாக்க நடவடிக்கை மன்றம் பிரதமர் தலையிடுமாறு கோரிக்கை

கின்றாரா, ஜூன்-27 – நில மேம்பாடு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சிலாங்கூர், பண்டார் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் நிலத்தில் கை வைக்க வேண்டாம் என கின்றாரா தமிழ்ப்பள்ளியைப் பாதுகாக்கும் நடவடிக்கைக் குழு (Save Kinrara Tamil School Action Team) எச்சரித்துள்ளது.

பள்ளியின் ஒரு பகுதி நிலத்தைக் கையகப்படுத்தாமல், கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) மற்றும் நில மேம்பாட்டு நிறுவனம் மாற்று வழியைக் கண்டறிய வேண்டும்.

வேண்டுமென்றால் பக்கத்தில் உள்ள வேறு நிலத்தில் கை வைத்துக் கொள்ளுங்கள்; வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பள்ளியை விட்டு விடுங்கள் என அந்நடவடிக்கைக் குழுவினர் இன்று நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.

Vierra Residence குடியிருப்பு நில மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரிக்கும் முன், அதனால் அப்பள்ளியின் ஒரு பகுதி கட்டடம் இடிக்கப்பட்டு பாதிக்கப்படப் போகும் 700 மாணவர்களின் நிலை குறித்து சிந்திக்காமல் DBKL எடுத்துள்ள முடிவு ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது.

இது நடந்திருக்கக் கூடாது; இனிமேலும் வேறெங்கும் இப்படி நடக்கவே கூடாது.

கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

பள்ளிகள், கோயில்கள், மசூதிகள் போன்ற இடங்களுக்கு அருகில் உயரமான கட்டடங்களை எழுப்ப அனுமதிக்கக் கூடாது என்றும் அக்குழுவின் சார்பில் பேசிய Dr Steram Sinnasamy வலியுறுத்தினார்.

இவ்விஷயத்தில், கின்றாரா சட்டமன்ற உறுப்பினரும் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினரும் அமைதிக் காக்கின்றனர்.

எனவே கல்வி அமைச்சர், கூட்டரசு பிரதேச அமைச்சர், தேவைப்பட்டால் பிரதமரே நேரில் தலையிட்டு பள்ளியின் நிலத்தைக் காப்பாற்ற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!