பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 22 – இனி செப்டம்பர் 11ஆம் திகதி முதல் கிராப் பே மின்-பணப்பையில் அதாவது GrabPay Walletல் கிரெடிட் கார்ட் மூலம் ரீலோட் (Credit Card Relod) செய்தால் 1 விழுக்காட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என கிராப் தெரிவித்திருக்கிறது.
கிராப் இணையதளத் தகவலின் படி, வங்கி பணப் பரிமாற்றங்கள், டெபிட் கார்ட்டுகள் மற்றும் GX வங்கி உள்ளிட்ட பிற கட்டண முறைகளில் இந்த 1 விழுக்காட்டு கட்டணம் விதிக்கப்படாது.
இதில் கிராப்புடன் இணைந்திருக்கும் சில Maybank கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த புதிய கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
கிரெடிட் கார்ட் ரீலோட்களின் செலவுகள் மற்றும் கிரெடிட் காட்டு நிலுவைகளிலிருந்து அதிக அளவு பணம் எடுக்கப்படுவதால் குறிப்பிடத்தக்க நிதிச் சுமைகளை கருத்தில் கொண்டு, இந்த 1 விழுக்காடு கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக மின்-பணப்பை சேவையை வழங்கும் TNG டிஜிட்டல் தெரிவித்துள்ளது.