Latestஅமெரிக்காஉலகம்

கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் 2025-ல் 1 பில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டி டோனல்ட் ட்ரம்ப் அதிரடி சாதனை

வாஷிங்டன், ஜூலை-1-அமெரிக்காவின் அதிபர் டோனல்ட் ட்ரம்ப், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மற்றும் டிஜிட்டல் சொத்து வர்த்தகங்கள் மூலம் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக அண்மைய நிதி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

பல்வேறு பெரிய அளவிலான டிஜிட்டல் டோக்கன் திட்டங்கள், பிரத்யேக NFT சேகரிப்புகளின் விற்பனை மற்றும் பரவலாக்கப்பட்ட நிதி தளங்களில் அவர் காட்டிய தீவிர ஈடுபாடு ஆகியவையே இந்த பிரம்மாண்ட வருமானத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்தாண்டில் உலகளாவிய கிரிப்டோ சந்தையில் ஏற்பட்ட அதிரடி மீட்சியும், அவரது அரசியல் செல்வாக்கும் இணைந்து இந்த அசுர வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளது.

ட்ரம்பின் இந்த வியூகம் புதிய நிதித் தொழில்நுட்பத் துறையை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்தியதைக் காட்டுகிறது; இது அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், டிஜிட்டல் சொத்து சந்தையில் உலக அரசியல் தலைவர்களின் பங்களிப்புக்கான ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளதாகவும் சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!