கிரிப்தோ நாணயக் கும்பல் மோசடி; ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் RM525,000 இழந்தார்

கோலாத் திரெங்கானு , செப்- 29,
இல்லாத கிரிப்தோ (Kripto ) நாணய முதலீட்டுத் திட்டத்தை நம்பி ஒரு மோசடி கும்பலிடம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் 525,000 ரிங்கிட் இழந்தார்.
முகநூலில் பதிவான kripto முதலீட்டு விளம்பரத்தை கண்டு 71 வயதுடைய பாதிக்கப்பட்ட முன்னாள் இயக்குநரான அந்த நபர் இந்த பணத்தை பறிகொடுத்தார் என கோலாத் திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ACP அஸ்லி முகமட் நோர் ( Azli Mohd Noor ) தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் 500,000 அமெரிக்க டாலர் தொகை வருமானம் கிடைக்கும் என சந்தேகப் பேர்வழி தெரிவித்த வாக்குறுதியை நம்பி அரச தந்திர நிர்வாகத்துறையின் முன்னாள் இயக்குநரான அந்த ஆடவர் ஏமாந்துள்ளார்.
தண்டணைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இணையம் மற்றும் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் மோசடி விளம்பர நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் எப்போதும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என Azli Mohd கேட்டுக்கொண்டார்.