
பாச்சோக் கிளந்தான் – மே 22- கடந்த சனிக்கிழமை, பாச்சோக் கோலா கிராயில் (Kuala Krai) ‘ஸ்பா’ (SPA) உரிமையாளர் மீது ஆசிட் வீசியதாக சந்தேகிக்கப்படும் பெண்ணை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் முகமட் யூசோஃப் மமட் (Mohd Yusoff Mamat) கூறியுள்ளார்.
ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் 38 வயதான அச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, அவரது ‘மைவி’ வாகனம், தொலைபேசி மற்றும் வாகன கட்டுப்பாடு சாதனம் போன்ற பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அப்பெண், படுங்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட விசாரணையில் , கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு, முந்தைய குற்றப்பதிவுகள் ஏதும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருந்தபோதும் காவல்துறையினர் இக்குற்றத்திற்கான காரணத்தை தீர விசாரித்து வருவதோடு தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக கிளந்தான் காவல் துறையினரை அணுக வேண்டுமெனவும் யூசோஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.