Latestமலேசியா

கிள்ளானில் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது; பாதுகாவலர் அடித்துக் கொலை

ஷா ஆலாம், ஏப்ரல்-5-கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் அதனை உறுதிப்படுத்தினார்.

குடியிருப்பின் பாதுகாவலர் சாவடியில் அதிகாலை 1 மணிக்கு அவ்வாடவருக்கும், இன்னொருவருக்கும் வாக்குவாதம் மூண்டது.

அப்போது, சந்தேக நபர் கூர்மையற்ற ஒரு பொருளால் தாக்கியதில் பாதுகாவலர் படுகாயமடைந்தார்; உடனடியாக ஷா ஆலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அதிகாலை 4 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீஸ், சந்தேக நபரை அடையாளம் கண்டு அவரைக் கைதுச் செய்தது.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் காரின் _steering lock_-க்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

40 வயது சந்தேக நபருக்கு ஏற்கனவே குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் 8 குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டதாக விஜயராவ் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!