
கோலாலம்பூர் , மார்ச்-24-கோலாலம்பூர் மாநகர் மையத்திற்கு அருகில் உள்ள கிள்ளான் ஆற்றில் ஒரு 4 சக்கர வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவ்வாகனம், நேற்று காலை Jalan Munsyi Abdullah அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி நேராக ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
எனினும், அங்கிருந்த பொது மக்கள் ஏற்கனவே அவ்வாடவரைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
கிரேன் மூலம் வாகனம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.
விபத்துக்கானக் காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை, விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
வாகானமோட்டியின் அடையாளங்களும் தெரிவிக்கப்படவில்லை.



