Latestமலேசியா

கிள்ளான் ஆற்றுப் படுகையில் பிரச்னையாக உருவெடுக்கும் தூக்கி வீசப்பட்ட பழைய ஜீன்ஸ்கள்; சிலாங்கூர் EXCO கவலை

கிள்ளான் – ஆகஸ்ட்-5 – கிள்ளான் ஆற்றில் பல்வேறான குப்பைகள் இருப்பது நமக்குத் தெரியும். மெத்தைகள் தொடங்கி டயர்கள், சைக்கிள்கள் மற்றும் பழைய கார்கள் போன்ற பல விஷயங்கள் அங்கு தூக்கி வீசப்படுகின்றன.

ஆனால் அந்த ஆற்றுப் படுகையை மிகவும் பாதிப்பவையாக விளங்குவது தூக்கி எறியப்பட்ட பழைய ஜீன்ஸ்கள் தான் என்கிறார் வசதிக் கட்டமைப்பு மற்றும் விவாசாயத் துறைகளூக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோக் இஸ்ஹாம் ஹாஷிம் (Izham Hashim).

இதற்குக் காரணம், ஜீன்ஸ் கால்சட்டைகள் சுருக்கமடைந்து, ஆற்று படுகையில் குப்பைகளை அகற்ற பயன்படும் cutter உறிஞ்சி இயந்திரங்களை சேதப்படுத்துகின்றன.

எனவே, தேவையற்ற உங்களின் ஜீன்ஸ் கால்சட்டைகளை ஆறுகளில் தூக்கி எறிய வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். வேறெங்கும் இல்லாமல் குப்பைத் தொட்டிக்குத் தான் அவை செல்ல வேண்டும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!