Latestமலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கில் தண்ணீர் விநியோகத் தடை; 182 தண்ணீர் லாரிகள் தயார் நிலையில் வைப்பு

பெட்டாலிங், ஜூன்-5 – கிள்ளான் பள்ளத்தாக்கில் அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை இன்று காலைத் தொடங்குவதால், நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அப்பகுதி வாழ் மக்கள் மீண்டும் நினைவுறுத்தப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 182 தண்ணீர் லாரிகள் அனுப்பப்படுகின்றன.

குறிப்பாக அதிகத் தேவையுள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறுநீரக சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற பகுத்களுக்கு அதில் முன்னுரிமைத் தரப்படும் என Air Selangor அறிவித்துள்ளது.

நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் பராமரிப்புப் பணிகளுக்கு வழி விடுவதற்காக அட்டவணையிடப்பட்ட இந்த தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

இதில் Petaling, Klang, Shah Alam, Gombak, KL, Hulu Selangor, Kuala Selangor ஆகிய வட்டாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நாளை அதிகாலை முதல் கட்டங்கட்டமாக தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு Air Selangor சமூக ஊடகப் பக்கங்களை வலம் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!