குஜராத், செப்டம்பர் 2 – குஜராத்தில் கனமழையால் அடித்து வரப்பட்டு குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரித்த முதலையை இளைஞர்கள் மீட்டு ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அப்படி குஜராத்தின் வடடோரா (Vadodara) பகுதியிலும் வெள்ளம் சூழ அங்கு முதலை நுழைந்துள்ளது.
இதனை பார்த்த, வடடோரா விலங்குகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் பாதுகாப்பாக அதனை மீட்டு ஸ்கூட்டர் பின்னால் அமர்ந்து, முதலையை மடியில் வைத்துக் கொண்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்க சென்றுள்ளனர்.
சாலையில் அவர்கள் முதலையை ஸ்கூட்டரில் கொண்டு போவதை பார்த்தவர்கள் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது தற்போது வைரலாகியுள்ளது.