Latestமலேசியா

குடும்ப பாதுகாப்பே முக்கியம்; RM50 சம்பளம் கிடைத்தாலும் போதும் காற்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டேன் – மனம் திறந்தார் பைசால் ஹலிம்

கோலாலம்பூர், ஜூன் 13 – acid தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து தனது குடும்பத்தின் பாதுகாப்பை கருதி காற்பந்து விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெறுவதற்கு திட்டமிட்டதோடு கிராமத்திற்கு சென்று விடுவது என முடிவு செய்தாக சிலாங்கூர் காற்பந்து குழுவின் நட்சத்திர ஆட்டக்காரரான பைசால் ஹலிம் ( Faisal Halim ) தெரிவித்தார்.

பெரிய அளவில் வருமானம் கிடைத்த போதிலும் குடும்பத்தின் பாதுகாப்புத்தான் முக்கியம் என்பதால் விரும்பத்தகாத சம்பவங்களால் அச்சத்தோடு வாழ்ந்து வருவது பிடிக்காமல் கிராமத்திற்கு சென்று விடலம் என்று கூட முடிவு செய்ததாக ஹரிமாவ் மலாயா குழுவிற்கு விளையாடியிருக்கும் பினாங்கை சேர்ந்தவரான 26 வயதுடைய பைசால் கூறினார்.

தினசரி 50 ரிங்கிட் – 100 ரிங்கிட் சம்பளம் கிடைத்தாலும் சொந்த கிராமத்திற்கு சென்று அங்கு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என தனக்கு எதிராக தாக்குதல் நடத்ததப்பட்ட இரண்டாவது வாரம் சிலாங்கூர் காற்பந்து கிளப்பின் நுட்பக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாரில் மொக்தாரிடம் ( Sharil Mokhtar ) தெரிவித்ததையும் பைசால் விவரித்தார்.

ஆனால் காற்பந்து விளையாட்டின் மீது இருந்துவரும் தீராத ஆர்வத்தினால் தொடர்ந்து விளையாடுவது என முடிவு செய்ததாகவும் மேலும் எனது மற்றும் மற்றும் குடும்பத்தினரிடன் பாதுகாப்புக்கு ஷாரிர் மொக்தார் உத்தரவாதம் வழங்கியதால் தாம் தொடர்ந்து காற்பந்து விளையாட முடிவு செய்ததாக முதல் முறையாக இன்று சிலாங்கூர் காற்பந்து கிளப் பயிற்சி மையத்தில் பகிரங்கமாக தோன்றியபோது செய்தியாளர்களிடம் பைசால் கூறினார்.

காற்பந்து திடலில் பிரகாசிப்பதற்கு முன் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் தாம் தயாராக வேண்டியிருப்பதாகவும் பொதுமக்களின் பிரார்த்தனை மற்றும் ஆதரவினால் தாம் குணமடைந்து வருவதாகவும் இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு முழுமையாக குணம் அடையமுடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உண்மையைச் சொன்னால் காற்பந்து விளையாடாமல் என்னால் இருக்கமுடியவில்லை. இந்த விளையாட்டை அதிகம் நேசிப்பதால் வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருக்க முடியவில்லை. காற்பந்து விளையாடுவதற்கு என் கால்கள் துடிக்கின்றன. ஆனால் இப்போது குணம் அடையவேண்டும். அதற்கு முன் தனது தசைகளை தாம் பலப்படுத்த வேண்டியிருப்பதாகவும் பைசால் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!