கோலாலம்பூர், ஜூன் 27 – அதிகமான மாணவர்கள் 2023-ஆம் ஆண்டு SPM தேர்வு எழுதாததற்கு, குடும்ப பிரச்சனை, விபத்து மற்று நோய்வாய் பட்டிருந்ததே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்ல தொடங்கி விட்டதும், அந்த காரணங்களில் அடங்கும் என்பது கல்வி அமைச்சு மேற்கொண்ட பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளதாக, அமைச்சர் பட்லினா சீடேக் தெரிவித்தார்.
கடந்தாண்டு பத்தாயிரத்து 160 பேர் SPM தேர்வு எழுதவில்லை.
அவர்களில், எட்டாயிரத்து 676 பேர் கல்வி அமைச்சின் கீழுள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள். ஆயிரத்து 263 பேர் தனியார் முறையில் தேர்வெழுத பதிந்து கொண்டவர்கள். எஞ்சிய 221 பேர் அரசாங்க நிறுவனம் அல்லது சமய பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
SPM தேர்வு எழுதாதவர்கள் குறித்து, மக்களவைக் கூட்டத்தில் இன்று முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.