Latestமலேசியா

குளுவாங்கை உலுக்கிய சம்பவம்; காதலியைப் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்

கடந்த புதன்கிழமை அதிகாலை, Simpang Renggam Toll Plaza அருகே 37 வயதான பெண் ஒருவர் தனது 44 வயது காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் அவ்விருவரும் பலத்த தீக்காயமடைந்தனர்.

இச்சம்பவத்தை போலீசார் கொலை முயற்சி அடிப்படையில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்று குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் Bahrin Mohd Noh  தெரிவித்துள்ளார்.

விசாரணையில், பேருந்தில் பயணித்த சந்தேக நபர், தனது காதலியின் கையை வெளியே இழுத்து, பின்னர் அவரின் உடலிலும் தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி lighter மூலம் தீ வைத்ததாக கூறப்படுகின்றது.

இதில், இருவரும் பலத்த தீக்காயமடைந்ததுடன், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முற்பட்ட 30 வயது ஆண் ஒருவரும் கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்களுக்கு ஆளாகினார்.

காயமடைந்த மூவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுக வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!