கர்நாடகா, மே-12 – தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவில் குழந்தைத் திருமணம் நின்று போன விரக்தியில் 16 வயது சிறுமியைக் கொன்று தலையைக் கையோடு எடுத்துச் சென்ற கொடூர ஆடவன் கைதாகியுள்ளான்.
அச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள கிராமமொன்றில் பிரகாஷ் என்ற 32 வயது அந்நபருக்கும், 16 வயது பிள்ளைக்கும் திருமண நிச்சதார்த்தம் நடைபெறவிருந்தது.
ஆனால், அச்சிறுமி திருமண வயதை அடையாததால் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அவளின் பெற்றோருக்கு அறிவுரைக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் வெறி கொண்ட பிரகாஷ், அன்று இரவே சிறுமியின் வீடு புகுந்து அவளை 100 மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் சென்று படுகொலைச் செய்தான்.
அதோடு அவளது தலையைக் கொய்து கையோடு எடுத்துச் சென்று ஒட்டுமொத்த ஊரையே கதி கலங்க வைத்தான்.
தலையோடு தலைமறைவான பிரகாஷ் சனிக்கிழமை கைதுச் செய்யப்பட்டு அவன் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது.