குவாலா சிலாங்கூர், ஆகஸ்ட்-28 – குவாலா சிலாங்கூரில் பேரங்காடியொன்றின் பின்புறம் உணவு விழா (food festival) நடைபெற்ற இடத்தில் மின்சாரம் தாக்கி, பாகிஸ்தானிய ஆடவர் மரணமடைந்தார்.
கனமழையின் போது, அவர் நண்பருடன் அங்கு நின்றிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, குவாலா சிலாங்கூர் இடைக்கால போலீஸ் தலைவர் மொஹமட் அம்பியா நோர்டின் (Mohd Ambia Nordin) சொன்னார்.
மழையின் போது, 32 வயது அவ்வாடவர் உணவுக் கூடாரமொன்றின் இரும்புக் கம்பியைப் பிடித்து நின்றிருந்தார்.
மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரை அங்கிருந்த மேடைக்குத் தூக்கிச் சென்று முதலுதவி கொடுத்துள்ளனர்.
ஆனால் அங்கேயே அவரின் உயிர் பிரிந்திருக்கிறது.
சவப்பரிசோதனைக்காக தஞ்சோங் காராங் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு சடலம் கொண்டுச் செல்லப்பட்டது.