Latestமலேசியா

குவா மூசாங்கில் வெட்டுமர லாரி கவிழ்ந்து மரக்கட்டை மோதியதில் இளம் பெண் படுகாயம்

குவா மூசாங், ஜூலை-9, கிளந்தான், குவா மூசாங்கில் வெட்டுமர லாரி கவிழ்ந்து மரக்கட்டை மோதியதில் இளம் பெண் படுகாயமடைந்தார்.

Jalan Gua Musang – Kuala Krai சாலையின் Bendahara சாலை சந்திப்பில் நேற்று காலை 11.23 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

சாலை சமிக்ஞை விளக்கை நெருங்கும் போது கட்டுப்பாட்டையிழந்து லாரி கவிழ்ந்ததில், சாலையில் சிதறிய பெரிய மரக்கட்டை 21 வயது சித்தி நோரெல்யானா கமாருசானின் (Siti Norelyana Kamaruzan) மோட்டார் சைக்கிளை மோதியது.

மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சித்தி, பக்கத்தில் இருந்த pickup லாரிக்கும் மரக்கட்டைக்கும் நடுவில் சிக்கிக் கொண்டார்.

அப்போது அங்கிருந்த மற்ற வாகனமோட்டிகள் அந்த pickup லாரியை அப்புறப்படுத்தி, சித்தியைக் காப்பாற்றி அம்புலன்சில் குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சித்தியில் உடல் நிலை மோசமாக இருப்பதாக அவரின் வருங்கால கணவர் கூறினார்.

சம்பவத்தின் போது அப்பெண் வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்த வேளை, அந்த வெட்டுமர லாரி பஹாங், குவாலா லிப்பிஸ் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.

வெட்டுமரம் மோதி சித்தி கீழே விழும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் அடங்கிய 2 நிமிடம் 33 வினாடி வீடியோ வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!