கூச்சிங், ஏப் 2 – கூச்சிங்கில் K.K Mart விற்பனை நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் கே.கே விற்பனை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்பதோடு கிழக்கு மலேசியாவில் முதல் முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூச்சிங்கிலுள்ள K.K Maart விற்பனை நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதை கூச்சிங் போலீஸ் தலைவர் Ahsmon Bajah உறுதிப்படுத்தினார். Jalan Satok க்கிலுள்ள அந்த விற்பனை நிலையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அங்கு வேலை செய்துவந்த 25 வயது நபர் புகார் செய்துள்ளார். அந்த விற்பனை நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சில பெட்டிகளின் மீது மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட போத்தல் வீசப்பட்டதாக புகார்தாரர் கூறியதாக Ahsmon Bajah வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வாரம் பேரா , பீடோரில் உள்ள KK MART மற்றும் Pahang, Kuantan னில் உள்ள K.K Mart வர்த்தக நிலையங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மார்ச் 26ஆம் தேதி Bidor ரிலுள்ள K.K Mar ட்டில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. மார்ச் 29ஆம் தேதி குவந்தானில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது தீயில் சில பொருட்கள் வீசப்பட்ட போதிலும் அந்த வர்த்தக மையத்தின் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். பண்டார் Sunway யிலுள்ள தனது வர்த்தக மையத்தில் Allah என்ற பதத்தைக் கொண்ட காலுறைகள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து K.K Mart வர்த்தக மையம் சர்ச்சைக்கு உள்ளானதோடு நாடு தழுவிய நிலையில் அந்த வர்த்தக மையத்தை புறக்கணிக்கும்படி அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை விடுத்தது.
அந்த காலுறைகளை விற்பனை செய்ததன் மூலம் முஸ்லீம்களின் சமய உணர்வுகளை காயப்படுத்தியதாக KK Mart வர்த்தக மையத்தின் தோற்றுவிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டது. அந்த நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக Xin Jian Chang Sdn Bhd ட்டின் மூன்று விற்பனை அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.