கூலாய், மே-8 – ஜொகூர், கூலாயில் இல்லத்தரசி ஒருவர் மர்ம கும்பலால் கடத்தப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு Taman Lagenda Putra-வில் உள்ள தனது வீட்டின் முன்புறம் 47 வயது அம்மாது அந்த பரபரப்பான நிமிடங்களை எதிர்கொண்டார்.
வீட்டுக்கு வெளியே இருந்து தனது மனைவி அலறும் சத்தம் கேட்டு போய் பார்த்த போது, உதடு, முகம் மற்றும் கை கால்களில் அவர் காயமடைந்திருந்தது கண்டு அதிர்ச்சியுற்ற கணவர் போலீசில் புகார் செய்தார்.
எங்கிருந்தோ வந்த மர்ம கும்பல் அம்மாதுவின் முகத்தில் குத்தி, அவரை சாலையில் தரதரவென இழுத்திருக்கிறது.
நால்வரடங்கிய அக்கும்பல் காருக்குள் தன்னை பிடித்துத் தள்ள முயன்ற போது, அவர்களுடன் போராடி அப்பெண் கடத்தப்படுவதில் இருந்து தப்பியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும் மர்ம கும்பலின் கார் பதிவு எண் அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை.
அக்கும்பலைத் தேடி வருவதாகக் கூறிய கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superitendan Tan Seng Lee , facebook-கில் பரவியது போல் அம்மாது மானபங்கப்படுத்தப்படவில்லை என்றார்.
எனவே, அச்சம்பவம் குறித்து தேவையற்ற யூகங்களைக் கிளப்பி, மக்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்க வேண்டாம் என அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.