Latestமலேசியா

கூலாயில் வெளிநாட்டினர் வர்ததகம் செய்து வந்த 11 கடைகளை உடனடியாக மூடும்படி உத்தரவு

கூலாய், நவ 13 – கூலாய், தாமான் பிந்தாங் உத்தாமாவில் வெளிநாட்டினர் வர்ததகம் செய்து வந்த 11 கடைகள் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டது. நேற்று கூலாய் நகரான்மைக் கழகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்றத்திற்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜப்னி முகமட் சுக்கோர் (Mohd Jafni Md Shukor ) தெரிவித்தார்.

லைசென்ஸ் இன்றி வர்த்தகம் நடைபெற்ற இந்த கடைகளில் உடப்புப்பிடி சேவையை நடத்திவந்த நிலையம், கை தொலைபேசி மற்றும் பல்பொருள் விற்பனை கடைகளும் அடங்கும் என அவர் கூறினார்.

மேலும் விதிமுறைகளை பின்பற்றாத இதர 9 கடை உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது. வெளிநாட்டினர் வார்த்தகம் செய்யும் கடைகளில் அவ்வப்போது தொடர்ந்து சோதனை நடவடிக்கை நடத்தப்படும்.

லைசென்ஸ் இன்றி வர்த்தகம் செய்தாலோ அல்லது பெர்மிட் இல்லாத வெளிநாட்டினரை வேலைக்கு வைத்திருக்கக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு நினைவுறுத்தப்பட்டது. கடை உரிமையாளர்கள் தங்களது வர்த்தக இடத்தை வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடக்கூடாது என்றும் இது தொடர்பான குற்றங்களில் சம்பந்தப்பட்டோருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை மற்றும் இவையிரண்டும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!