சீக், செப்டம்பர் -15 – கெடா, சீக், கம்போங் ஜெலுத்தோங்கில் 120 தடவை குளவிகள் கொட்டியதால் உடலுறுப்புகள் செயலிழந்து முதியவர் உயிரிழந்துள்ளார்.
குளவிகள் கொட்டியக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, 73 வயது Ahman Dahman சுயநினைவோடு தான் இருந்தார்.
ஆனால், மெல்ல மெல்ல முக்கிய உடலுறுப்புகள் செயலிழந்து இரவு 9.50 மணி வாக்கில் அவர் உயிரிழந்ததாக போலீஸ் கூறியது.
அவர் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தின் போது மரமேறி தனது மகனுடன் அவர் ‘dokong’ பழத்தைப் பறித்துக் கொண்டிருந்த போது குளவிகள் கொட்டின.
உடலிலும் முகத்திலும் குளவிகள் கொட்டியவர், தீயணைப்பு – மீட்புத்துறையின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.