
கெடா நெல் வயலில் வெப்பக் காற்று பலூன் அவசரத் தரையிறக்கம்; உயிரிழப்பு இல்லை
அலோர் ஸ்டார், பிப்ரவரி-24,
கெடா, அலோர் ஸ்டாரில் ஒரு வெப்பக் காற்று பலூன் நெல்வயலில் அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kota Sarang Semut, Kampung Pisang நெல் வயலில் நேற்று காலை 8.30 மணியளவில் அது தரையிறங்கியதாக, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி கூறினார்.
இந்த பலூன், காலை 6.30 மணிக்கு பெண்டாங் மினி அரங்கிலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடலுக்கு திசை திரும்புவதைத் தவிர்க்கவே, வேறு வழியின்றி வயலில் தரையிறங்கியதாக குழுவினர் விளக்கம் அளித்தனர்.
நல்லவேளையாக அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
பலூன், பினாங்கில் உள்ள ஒரு உல்லாசத் தலத்திற்குச் சொந்தமானது என்றும் இத்தாலிய பயிற்சியாளர் மற்றும் உள்ளூர் குழுவினர் அதனை இயக்கியதாகவும் தெரிகிறது.
ஆனால், இந்த வெப்பக் காற்று பலூன் பறப்பதற்கு மலேசிய பொது வான் போக்குவரத்து அதிகாரத் தரப்பான CAAM மற்றும் வான்வழி கட்டுப்பாட்டு மையமான ATC-யின் அனுமதி இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு பேராக், தைப்பிங் வான்வெளியில் மட்டுமே பறக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் CAAM-மின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



