Latestமலேசியா

கெந்திங் கோர விபத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து; ஓட்டுநர் மீது 2 குற்றச்சாட்டு

ரவூப், ஜூலை-3 – கடந்த சனிக்கிழமை கெந்திங் மலையில் கோர விபத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்தின் ஓட்டுநர், இன்று ரவூப் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

எனினும் 32 வயது எஸ். ஆனந்த குமார் தமக்கெதிரான இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

மரணம் விளைவிக்கும் அளவுக்கு பேருந்தை ஆபத்தான முறையில் ஓட்டியதாக முதல் குற்றச்சாட்டும், முறையான வாகனமோட்டும் உரிமம் இல்லாமல் வாகனமோட்டியதாக இரண்டாவது குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் குற்றத்திற்கு குறைந்தது 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட்கும் மேற்போகாத அபராதமும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது குற்றத்திற்கு, அதிகபட்சம் 3 மாதங்கள் சிறை, குறைந்தது 300 ரிங்கிட் முதல் அதிகபட்சமாக 3,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

8,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உதரவாதத்தில் ஜாமீனில் விடுக்கப்பட்ட ஆனந்த குமார், வழக்கு முடியும் வரை வாகனமோட்டும் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது.

வழக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

ஜூன் 29-ஆம் தேதி ஆனந்த குமார் ஓட்டிச் சென்ற சுற்றுலா பேருந்து Jalan Genting Highlands-சில் இறங்கும் போது கவிழ்ந்ததில், சீன நாட்டு பிரஜைகள் இருவர் பலியான வேளை, 19 பேர் உயிர் தப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!