பெந்தோங், மே 20 – பஹாங், கெந்திங் மலையிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில், அண்மையில் துரித மீயை சமைக்கும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் என நம்பப்படும் 15 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் பத்து பேர் ஆண்கள். எஞ்சிய ஐவர் பெண்கள் என பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ யாஹ்யா ஒத்மான் தெரிவித்தார்.
பெந்தோங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்த போது கைதுச் செய்யப்பட்ட அவர்கள் அனைவரும், வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்ட பின்னர் போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டதையும் யாஹ்யா உறுதிப்படுத்தினார்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் வேளை ; அது தொடர்பில் இதுவரை நான்கு சாட்சியாளர்களின் வாக்குமூலமும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை நிறைவுப் பெற்றவுடன் அது மேல் நடவடிக்கைகாக துணை அரசாங்க தரப்ப்ய் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படுமென யாஹ்யா சொன்னார்.
முன்னதாக, கெந்திங் மலையிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில், இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், கும்பல் ஒன்று துரித மீயை சமைக்கும், 50 வினாடி காணொளி ஒன்று X சமூக ஊடகத்தில் வைரலானது.
இம்மாதம் 13-ஆம் தேதி நிகழ்ந்ததாக நம்பப்படும் அச்சம்பவம் தொடர்பில், மறுநாள் மே 14-ஆம் தேதி,நண்பகல் மணி 12.35 வாக்கில் போலீசார் புகார் ஒன்றை பெற்றதாக, இதற்கு முன் பெந்தோங் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜைஹாம் முஹமட் கஹார் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.