Latestஉலகம்

கென்யாவிலிருந்து 2,000 எறும்புகள் கடத்தல் சீன பிரஜை மீது குற்றச்சாட்டு

நைரோபி, மார்ச் 18 – கென்யாவிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட உயிருள்ள எறும்புகளைக் கடத்த முயன்றபோது பிடிபட்ட சீன பிரஜையும் அவரது கென்ய நண்பரும் , வனவிலங்குகளை சட்டவிரோதமாகக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த வாரம் நைரோபியில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் ஜாங் கெக்குனின் என்பவரின் பயணப் பையில் இருந்த சோதனைக் குழாயில் அந்த எறும்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

சார்லஸ் மவாங்கி என்பவரிடமிருந்து ஒவ்வொரு 100 எறும்புகளையும் 10,000 கென்ய ஷில்லிங்குகளுக்கு ஜாங் வாங்கியதாகத் நைஜீரிய நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தோட்ட எறும்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள சேகரிப்பாளர்கள் அவற்றை செல்ல பூச்சிகளாக வளர்ப்பதாகவும் கென்ய அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

நாட்டிலிருந்து வெளியே கொண்டுவர முயன்ற பூச்சிகளின் விஷயத்திலும் இதுதான் நடந்ததா என்பதை அதிகாரிகள் கூறவில்லை, ஆனால் அவரது பயணப் பெட்டிகள் சீனாவிற்குச் செல்லவிருந்தன.

ஒரு பெருங்குற்றத்தைச் செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த இரு நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் உயிருள்ள எறும்புகளுடன் பிடிபட்டதைத் தொடர்ந்து, மவாங்கி மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!