சுக்காய், ஜூலை-21 – திரங்கானு, கெர்த்தே தொழில் பேட்டையில் நேற்று மாலை ஏற்பட்ட ஹைட்ரோகார்பன் (hydrocarbon) எரிவாயு கசிவில், ஒரு தொழிலாளி காயமடைந்த வேளை, மேலுமிருவர் காயத்திலிருந்து தப்பினர்.
நியமிக்கப்பட்ட குத்தகையாளரின் பழுதுப்பார்ப்பிலிருந்த குழாயிலிருந்து அந்த எரிவாயு கசிவு ஏற்பட்டதை தீயணைப்பு மீட்புத் துறை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து உடனடியாக cooling down முறையில், குழாயிலிருந்த எரிவாயுவின் அழுத்தத்தை முழுமையாகக் குறைத்தோமென தீயணைப்புத் துறையின் பேச்சாளர் சொன்னார்.
எரிவாயு கசிவிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் வழுக்கி விழுந்து 29 வயது தொழிலாளி கெண்டைக் காலில் காயமடைந்தார்.
முறையே 23, 45 வயதிலான மற்ற இரு தொழாலாளிகள் காயமின்றி தப்பினர்.
எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தும் பணிகள் மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தன.
எரிவாயுக் கசிவுக்கான உண்மைக் காரணம் விசாரிக்கப்படுகிறது.