Latestஇந்தியாஉலகம்

கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது ; பிரேமலதா பெற்றுக் கொண்டார்

புதுடெல்லி, மே 10 – மறைந்த நடிகரும், தேமுதிக தோற்றுனருமான கேப்டன் விஜயகாந்துக்கு, இந்தியாவின் உயரிய பத்ம பூஷண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து அவ்விருதை பெற்றுக் கொண்டார்.

தமிழ் சினிமா வளர்ச்சியில் மகத்தான பங்களிப்பை வழங்கிய பழம்பெரும் தமிழ் நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்க வளர்ச்சியிலும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பர் 28-ஆம் தேதி, உடல் நலக்குறைவால் விஜயகாந்த் காலமானார். தமிழ் திரையுலகில் யாராலும் ஈடு செய்ய முடியாத, தமக்கென ஒரு தனி முத்திரையை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

விஹயகாந்தின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், மத்திய அரசாங்கம் அவருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்தது.
இந்நிலையில், இவ்வாண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டன. கடந்த ஜனவரியின் அந்த விருது பட்டியல் வெளியிடப்பட்டது.

விஜயகாந்தை தவிர்த்து தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்ட வேளை ; தமிழ்க வீராங்கனை ஜோஷ்னாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!