
குவந்தான், செப்டம்பர் 20 – இவ்வாரம் தொடங்கி இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து, கேமரன் மலைப்பகுதியுலுள்ள 3 சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கேமரன் மலைப்பகுதியின் வன காப்பகமான HSK, தாமான் Eko Rimba Mossy Forest, தாமான் Eko Rimba Sungai Pauh ஆகிய இடங்களில் பொழுதுபோக்கு நடவடிக்கை, மலை ஏறுதல், முகாமிடுதல் ஆகிய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்ந்து வரும் மழையினால், நிலச்சரிவுகளும், மரங்கள் விழும் அபாயங்களினால், இந்த முடிவு செப்டம்பர் 18ஆம் திகதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக, கேமரன் மலை மாவட்ட வனத்துறை அதிகாரி அரிஃபடி (Arifhandi) அறிவித்தார்.
இந்த காலகட்டத்தில் நடைபயணம் மற்றும் முகாமிட முன்பதிவு செய்துள்ள பொதுமக்கள், கேமரன் மலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் முன்பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அரிஃபாடி(Arifhandi) கூறியுள்ளார்.
வானிலை முன்னறிவிப்புகளின் படி, அசம்பாவிதங்களைத் தடுக்க இம்முடிவு பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.