
தங்களது மாதாந்திர விற்பனை இலக்கை நிறைவேற்றத் தவறியதால் கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் நாயைப்போல் கழுத்தில் கயிறு கட்டப்பட்டு தொழிலாளர்கள் நடக்க வைத்து செல்லப்பட்டு பானையில் வைத்திருக்கும் தண்ணீரை குடிக்கும் சம்பவம் வைரலாகியுள்ளது.
தரையில் போடப்பட்ட சில்லறை காசுகளை நாயைப்போல் வாயினால் கவ்வி எடுக்கும்படியும் அந்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்ததாக கூறப்பட்டாலும் நேற்றிலிருந்துதான் இது தொடர்பான காணொளி வைரலாகியுள்ளது.
இதனுடையே இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேரளா தொழிலாளர் அமைச்சர் வி.சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.