கோலாலம்பூர், மே 3 – K.K Mart விற்பனை மையங்களை புறக்கணிப்பதை நிறுத்தும்படி முஸ்லீம்களை பேரா முப்தி Wan Zahidi Wan Teh கேட்டுக் கொண்டார். காலுறைகளில் Allah மீதான விவகாரத்தில் பொதுமக்களின் பதில் இஸ்லாமிய நீதியின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகிவிட்டதால் K.K Mart விற்பனை மையங்களை புறக்கணிப்பதை முஸ்லிம்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறத்தினார். இஸ்லாமிய சட்டத்தில் குற்றவியல் நடத்தையின் நோக்கம் ஒரு முக்கிய அங்கமாகும். இஸ்லாத்தை அவமதிக்கும் நோக்கத்தை சம்பவத்திற்குப் பிறகு K. K Mart ட்டின் செயல்களில் நிரூபிக்க முடியாது என அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு K.K Mart நிர்வாகத்தின் விளக்கமும் பகிரங்க மன்னிப்பும், இஸ்லாமிய மேம்பாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும் இந்த அம்சம் நிரூபிக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என இன்று Wan Zahidi செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மதீனாவில் நிறுவப்பட்ட முதல் இஸ்லாமிய அரசில் பல்வேறு இனங்களுக்கிடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக நபிகள் நாயகம் மதீனா சாசனத்தை உருவாக்கியதாகவும் முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லிம்களுடன் சேர்ந்து சமூகத்தின் ஒரு பகுதி என்று சாசனம் கூறுவதையும் அவர் சுட்டிக்காட்டினைர்.