Latestமலேசியா

கைவிலங்குடனும் வெறுங்காலிலும் அதிவேகமாக ஓடி உலகச் சாதனைப் படைத்த Melinder Kaur

கோலாலம்பூர், ஜூன்-9 – தேசிய முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையும் 5 முறை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவருமான Melinder Kaur, 2 புதிய உலகச் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளார்.

Setapak, Arena Sukan Kuala Lumpur அரங்கில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் பெண்களுக்கான 1 மைல் தூரம் அதாவது 1.6 கிலோ மீட்டரை அதிவேகத்தில் கடந்தும், அதே தூரத்தை வெறுங்காலில் ஓடியும் நேற்று அச்சாதனைகளை அவர் படைத்தார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை, 5 நிமிடங்கள் 57 வினாடிகளில் ஓடி முடித்த Melinder, 2018-ல் அயர்லாந்தின் Sandra Hickson செய்திருந்த உலகச் சாதனை நேரமான 6 நிமிடங்கள் 37 வினாடிகளை முறியடித்தார்.

பின்னர் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை வெறுங்காலில் அதிவேகத்தில் ஓடிய பெண் என்ற இரண்டாவது சாதனையையும் அவர் பதிவுச் செய்தார்.

அது இதுவரை யாரும் முயற்சி செய்யாத சாதனையாகும்.

சாதனை நேரத்துக்கான அளவுகோலாக கின்னஸ் உலகச் சாதனை தரப்பு 6 நிமிடங்கள் 5 வினாடியை நிர்ணயித்த நிலையில், Melinder 6 நிமிடங்கள் 4 வினாடியில் வெறுங்காலில் ஓடி முடித்தார்.

தனது அவ்விரு சாதனைகளும் உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிப்படுவதற்கு Melinder காத்திருக்க வேண்டும்.

என்றாலும், கைவிலங்கிடப்பட்ட நிலையில் அவர் ஓடி நிகழ்த்திய சாதனையை, மலேசிய சாதனைப் புத்தகம் அங்கீகரித்து நேற்று அவருக்கு அதற்கான சான்றிதழை வழங்கியது.

36 வயது Melinder, ஏற்கனவே treadmil-லில் 25 மணி நேரங்களுக்கு இடைவிடாமல் ஓடியது, 12 மணி நேரங்களுக்கு பின்னோக்கி ஓடியது போன்றவற்றுக்கான மலேசிய சாதனைகளை வைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!