Latestமலேசியா

கொடூரம்; சாக்கில் கட்டப்பட்ட 2 நாய்கள்; விரைந்து விடுவித்த ஆடவரின் கருணைக்கு குவியும் பாராட்டு

பினாங்கு, ஆகஸ்ட் 20 – பினாங்கு, தாசெக் கெலுகோரில் (Tasek Gelugor), சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்த இரண்டு நாய்கள், இரக்கமுள்ள ஆடவர் ஒருவரின் விரைவான செயலால், உயிர் பிழைத்துள்ளன.

இந்த காணொளி வைரலாகி வலைத்தளவாசிகளின் பாராட்டைப் பெற்று வருகின்றன.

மனதை உருக்கும் அக்காணொளியில் இரண்டு வெள்ளை சாக்கு மூட்டைகள் நகர்வதைக் காணமுடிகிறது.

அதற்குள் ஏதோ ஒன்று சிக்கியுள்ளதை உணர்ந்த சம்பந்தப்பட்ட ஆடவர், அருகில் சென்று மூட்டையைத் திறந்த போது, பரிதாபமான நிலையில் இரண்டு நாய்கள் சாக்கில் கட்டப்பட்டிருந்தன.

இதனிடையே ‘இப்போதெல்லாம் மனிதனின் கொடூரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது; செல்ல பிராணியைக் கைவிட விரும்பினால், குறைந்தபட்சம் அதைச் சரியாகச் செய்யுங்கள். இப்படித் சாக்கில் கட்டி தூக்கி எறிந்தால், நாய்கள் சுயமாகவே வெளியேறிவிடுமா?’ என்று தனது அதிர்ச்சியையும் விரக்தியையும் அந்த நாய்களை காப்பாற்றிய ஆடவர் தனது சமூக வலைத்தள பதிவில் பதிவிட்டிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!