Latestஉலகம்

கொல்கத்தா-பெங்களூரு இண்டிகோ விமானத்தின், அவசர கதவை திறக்க முயன்ற மாணவன் கைது

பெங்களூரு, மே 2 – இண்டிகோ விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற 22 வயது மாணவர் ஒருவரை, பெங்களூரு சர்வதேச விமான நிலைய போலீசார் கைதுச் செய்துள்ளனர்.

நேற்று, மே முதலாம் தேதி, கொல்கத்தாவிலிருந்து பெங்களூருக்கு பயணமான இண்டிகோ விமானத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

கைதுச் செய்யப்பட்டவர், கொல்கத்தாவைச் சேர்ந்த கார்த்திக் கரண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் எம்சிஏ பட்டப் படிப்பை மேற்கொள்ளும் முதலாம் ஆண்டு மாணவர் ஆவார்.

முதல் முறையாக விமானத்தில் பயணித்த கரண், தனது நண்பரைச் சந்திக்க இண்டிகோ விமானத்தில் பெங்களூரு வந்ததாக கூறப்படுகிறது.

எனினும், பயணத்தின் போது, கரண் அவசரக் கதவை திறக்க முயற்சிப்பதைக் கவனித்த கேபின் குழுவினர், அவனை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

பெங்களூருவிலுள்ள, கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் கைதுச் செய்யப்பட்ட கரண் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அச்சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்த இதர பயணிகள் பீதியடைந்ததாக கூறப்படுகிறது.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கரணுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள வேளை ; விமானத்தின் அவசரக் கதவை திறக்க தாம் முயலவில்லை எனவும், இருக்கையில் இருந்து எழவே தாம் அவசரக் கதவின் பிடியை பற்றியதாகவும் அவன் கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!