
கோத்தா பாரு,
கோத்தா பாரு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் இருந்து அனுமதி இன்றி வெளியே கொண்டு செல்லப்பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்தை, மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசாரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
செப்டம்பர் 20 ஆம் தேதியன்று பிறந்த குழந்தை, மறுநாளே காணாமல் போனதாக மருத்துவமனை உறுதிப்படுத்தியது.
சம்பவத்துக்குப் பின்னர் உடனடியாக மருத்துவமனை “Code Pink” அவசர எச்சரிக்கை அறிவித்து, உள் தேடுதல் நடவடிக்கை தொடங்கியது என்று கிளாந்தான் சுகாதாரத் தலைவர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசென் தெரிவித்தார்.
CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், தம்பதியொருவர் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியே எடுத்துச் சென்றது தெரியவந்தது.
செப்டம்பர் 23 ஆம் தேதியன்று கோத்தா பாரு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அந்த தம்பதியின் வீட்டைச் சென்றடைந்ததில் அங்கு குழந்தையும் 29 வயதான தாயாரும் பாதுகாப்பாகவும், மருத்துவ பரிசோதனையில் நலமாகவும் இருப்பதையும் உறுதிசெய்தனர்.
குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டதில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த டத்தோ ஜைனி (Zaini) இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனை நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறினார்.