Latestமலேசியா

கோலாகுபு பாரு இடைத்தேர்தல்; எதிர்க்கட்சிகளின் தந்திரமான பிரச்சாரங்களை சிலாங்கூர் மந்திரிபுசார் சாடல்

உலுசிலங்கூர் மே 9 – கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சூழ்ச்சிகரமான பிரச்சார அணுகுமுறைகளை மேற்கொள்வதாக சிலாங்கூர் மந்திரிபெசார் Amirudin Shari சாடினார்.

Perikatan Nasional குறிப்பாக Bersatu, தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பல்வேறு முயற்சிகளை கையாள்கிறது. அதாவது கடுமையான வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளை அது பின்பற்றுகிறது என அவர் கூறினார். Muhyiddin Yassin நிர்வாகத்தின் ஆட்சியில் மக்களின் நிலைமை மோசமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

பொருட்களின் விலை அவர்களின் பிரச்சாரக் கருப்பொருளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் விலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை.

அல்லது அவர்களின் நிர்வாகத்தின் போது போதுமான உணவு விநியோகம் இருந்ததா என்பதைச் சரிபார்க்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் , பொருட்களின் விலையைப் பற்றி பெரிக்காத்தான் நேசனல் அவ்வளவு விரைவாகப் பேசாது என்று கோலா குபு பாரு Ampang Pecahவில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றியபோது Amirudin தெரிவித்தார்.

2020ல் அரசியல் சூழ்ச்சிகளில் அதன் நகர்வை நியாயப்படுத்த எதிர்க்கட்சி விரும்புவதால், அந்த உத்தியை அக்கட்சி தேர்ந்தெடுத்துள்ளது என பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவருமான Amiruddin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!